விமல் வீரவன்சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

விமல் வீரவன்சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

விமல் வீரவன்சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2017 | 3:47 pm

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (20) உத்தரவிட்டார்.

அரச வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காக அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வாடகை அடிப்படையில் பெற்று, ஜனாதிபதி செயலகம் ஊடாக அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்பட்ட 40 வாகனங்களை, தமது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கியமையால், அரசாங்கத்திற்கு 9 கோடி ரூபாவுக்கும் மேல் நட்டத்தை ஏற்படுத்தியதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் இரண்டாம் பிரதிவாதியான அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் சமந்த லொக்கு ஹென்னதிகேவுக்கு நீதிமன்றம் இன்று (20) பிணை வழங்கியுள்ளது.

அவரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், 10 இலட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்