கேப்பாப்பிலவு மக்களின் நில மீட்புப் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் ஆதரவுகள்

கேப்பாப்பிலவு மக்களின் நில மீட்புப் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் ஆதரவுகள்

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2017 | 8:15 pm

காணிகளை விடுவிக்கக்கோரி கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடக்கின் பல பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கேப்பாபிலவு- பிலக்குடியிருப்பு விமானப்படை முகாம் அமைந்துள்ள காணிகளை விடுவிக்குமாறு
கோரி 21 நாளாகவும் போராட்டம் இடம்பெற்றவருகின்றது.

சொந்த நிலத்தை மீட்பதற்காக இரவு பகலாக போராடும் மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் இணைந்து கொள்கின்றனர்.

இதேவேளை, கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்களும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்