கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதில் அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதில் அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2017 | 9:08 pm

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதில் அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து பட்டதாரிகளினால் இன்று (20) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரிக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

222 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து 86 பட்டதாரிகளினால் நிகழ்வு இடம்பெறவிருந்த விவேகானந்தா கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆசிரியர் நியமன நிகழ்விற்கு வருகைதந்தவர்களை மண்டபத்திற்குள் நுழையவிடாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுத்தனர்.

ஆசிரியர் நியமன நிகழ்விற்காக வருகைதந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் ஆகியோரையும் மண்டபத்திற்குள் நுழையவிடாமல் ஆர்ப்பாட்டக்கார்கள் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் விரைவில் தீர்வைபெற்றுத்தருவதாக இருவரும் வாக்குறுதியளித்ததையடுத்து மண்டபத்திற்குள் செல்வதற்கான அனுமதியை ஆர்ப்பாட்டக்கார்கள் வழங்கினர்.

அதனையடுத்து திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் கிழக்கு மாகாணத்திலுள்ள 222 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கிவைக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்