ஒரு மாதத்தில் நீர் மின் விநியோகம் குறைவடையும் அபாயம்

ஒரு மாதத்தில் நீர் மின் விநியோகம் குறைவடையும் அபாயம்

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2017 | 7:41 pm

இன்னும் ஒரு மாதத்தில் நீர் மின் விநியோகம் தடைப்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து வருகின்றமை அதற்கான காரணமாகும்.

2016 ஆம் ஆண்டுகளில் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகளவில் குறைவடைந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நீர்த்தேங்களின் நீர் மட்டம் 70 வீதமாக காணப்பட்ட போதிலும் இந்த வருடம் அது 32.13 ஆக குறைவடைந்துள்ளது.

தற்போது நாளொன்றுக்கான நீர் மின் உற்பத்தி நூற்றுக்கு 11 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அனைத்து நீர்த்தேக்கங்களின் நீரை சேர்த்து, 404.4 வோட்ஸ் மின்சாரத்தையே தற்போது உற்பத்தி செய்ய முடியும்.

இது, நாட்டின் மின் தேவை மற்றும் விநியோகத்தின் 10 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடமே குறைந்தளவிலான நீர் மின் உற்பத்தி பதிவாகியுள்ளது.

எனினும் இலங்கையின் நாளாந்த மின்சாரத் தேவையின் 85.94 வீதமான பகுதி அனல் மின் உற்பத்தி மூலமே பெற்றுக் கொள்ளப்படுகின்றது.

எனினும், இலங்கையின் மின் வாடிக்கையாளர்களின் அனுபவத்தின்படி, நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையம் செயலிழக்காது தொடர்ந்து செயற்பட்ட காலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்