மலையகத்தில் தொடரும் பனிப் பொழிவு காரணமாக தொழிலாளர்களின் பொருளாதார நிலை பாதிப்பு

மலையகத்தில் தொடரும் பனிப் பொழிவு காரணமாக தொழிலாளர்களின் பொருளாதார நிலை பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2017 | 8:36 pm

மலையகத்தில் நிலவிய வறட்சி மற்றும் தொடரும் பனிப் பொழிவு காரணமாக தமது பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மலையகத்தில் தற்போது பனிபொழிவு அதிகரித்து குளிருடன் கூடிய காலநிலை நிலவிவருகின்றது.

பனிப்பொழிவு மற்றும் கடும் வெய்யில் காரணமாக தோட்டங்களின் தேயிலைச் செடிகள் கருகியுள்ளன.

தேயிலைச் செடிகளின் கொழுந்து குறைவடைந்துள்ளமையால் தொழிலாளர்களினால் பறிக்கப்படும் கொழுந்தின் அளவு குறைவடைந்துள்ளது.

வாராந்தம் வழங்கப்படுகின்ற வேலை நாட்களும் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதார பிரச்சினையை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்