நம்பிக்கை வாக்கெடுப்பை இரத்துச் செய்யுமாறு தமிழக ஆளுநரிடம் கோரிக்கை

நம்பிக்கை வாக்கெடுப்பை இரத்துச் செய்யுமாறு தமிழக ஆளுநரிடம் கோரிக்கை

நம்பிக்கை வாக்கெடுப்பை இரத்துச் செய்யுமாறு தமிழக ஆளுநரிடம் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2017 | 7:46 pm

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு இரத்துச் செய்யப்பட வேண்டும் என தமிழக ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கடும் அமளி துமளிகளுக்கு மத்தியில் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.

அரசுக்கு ஆதரவாக 122 சட்டமன்ற உறுப்பினர்களும், எதிராக 11 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.

தமது வெற்றியை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மரியாதை நிமித்தமாக ஆளுநர் வித்யாசாகர் ராவை ஆளுநர் மாளிகையில் இன்று முற்பகல் சந்தித்துள்ளனர்.

சட்டமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு கோரி அமளியில் ஈடுபட்ட மு.கா.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.

மெரினாவில் நேற்று போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 2,000 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில், சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற தாக்குதல்களை கண்டித்து எதிர்வரும் 22 ஆம் திகதி தமிழகத்தின் பல பகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு அணியினரும் இன்று ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்தித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்