காணாமற்போனவர்களை கண்டறிவதற்கான முறைப்பாடுகள் யாழில் இன்று பதிவு

காணாமற்போனவர்களை கண்டறிவதற்கான முறைப்பாடுகள் யாழில் இன்று பதிவு

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2017 | 8:16 pm

காணாமற்போனவர்களை கண்டறிவதற்கான முறைப்பாடுகளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று (19) யாழ்ப்பாணத்தில் பதிவு செய்தது.

இந்த முறைப்பாடுகள், யாழ்.சாவகச்சேரி மீசாலை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் இன்று பதிவுசெய்யப்பட்டன.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பேராசிரியர் ஜயந்த களுபோவிலவும் இதில் கலந்துகொண்டிருந்தார்

காணாமற்போனவர்களின் உறவினர்கள் 50 பேர் தமது முறைப்பாடுகளை இன்று (19) முன்வைத்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்