எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் நில மீட்புப் போராட்டம்

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் நில மீட்புப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2017 | 7:16 pm

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் நில மீட்புப் போராட்டம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களின் நில மீட்பு போராட்டம் மூன்று வாரங்களாக தொடர்கின்றது.

இந்தப் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தனர்.

சொந்த நிலத்தை மீட்பதற்காக இரவு பகலாக போராடும் மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக தினமும் பல்வேறு தரப்பினர் இணைந்து கொள்கின்றனர்

சொந்த வாழ்விடம் இழந்து இன்னல்படும் இவர்களின் வாழ்வின் எதிர்கால விடியல் எப்போது?

உறவுகள் வரலாம் என அடுக்களையில் ஒரு பிடி அரிசியை, கூட இட்டு சாதம் சமைத்தவர்கள் இன்று வீதியில் உணவிற்காக காத்திருக்கின்றனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்