ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல் நடத்திய இராணுவ உறுப்பினர்கள் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல் நடத்திய இராணுவ உறுப்பினர்கள் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2017 | 3:55 pm

ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஏனைய இராணுவ உறுப்பினர்கள் இருவரும் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கீத் நொயார் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராணுவ மேஜர் ஒருவர் உட்பட மூன்று இராணுவ உறுப்பினர்கள் நேற்று (18) கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச் சென்று தடுத்து வைத்து தாக்கல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் புலனாய்வு பிரிவின் இரண்டு உறுப்பினர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த இரண்டு சந்தேகநபர்களும் அடுத்த மாதம் மூன்றாம் திகதி அடையாள அணிவகிப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவின் மூன்று உறுப்பினர்கள் நேற்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சம்பவத்தின் பின்னர் பாதுகாப்பு கருதி ஊடகவியலாளர் கீத் நொயார் வெளிநாடு சென்றிருந்தார்.

அவர் மீது தாக்கல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

த நேஷன் பத்திரிகையின் ஊடகவியலாளரான கீத் நொயார் மீது 2008 ஆம் ஆண்டு மே மாதம் தாக்கல் மேற்கொள்ளப்பட்டது.

அலுவலகத்தில் இருந்து வீடு சென்று கொண்டிருக்கும் போது அவர் கடத்தப்பட்டு அவர் மீது தாக்கல் மேற்கொண்ட பின்னர் மீண்டும் அவரது வீட்டுக்கு அருகில் விட்டுவிட்டுச் சென்றிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்