அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை வெற்றி

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை வெற்றி

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை வெற்றி

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2017 | 5:47 pm

உபுல் தரங்க தலைமையிலான இலங்கை அணி இரண்டாவது 20 இற்கு 20 தொடர் வெற்றியை இன்று பதிவு செய்தது.

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 2 ஆவது இருபதிற்கு இருபது போட்டியை வெற்றிகொண்டதன் மூலமே இலங்கை அணி இந்த மைல் கல்லை எட்டியது.

தென் கீலோங் விக்டோரியா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 173 ஓட்டங்களை பெற்றது.

174 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலளித்தாடிய இலங்கை அணி 02 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பாக அசேல குணரத்ன இறுதிவரை களத்தில் நின்று வெற்றிக்கு வித்திட்டார்.

அசேல குணரத்ன ஆட்டமிழக்காது 46 பந்துகளில் 84 ஓட்டங்களை விலாசினார்.

இந்த வெற்றியுடன் 03 போட்டிகள் கொண்ட இருபதிற்கு இருபது தொடரை 2 இற்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் முதல் இரண்டு விக்கெட்டுக்களும் 63 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்