வாகன விபத்துக்களில் பெண் உள்ளிட்ட நால்வர் உயிரிழப்பு

வாகன விபத்துக்களில் பெண் உள்ளிட்ட நால்வர் உயிரிழப்பு

வாகன விபத்துக்களில் பெண் உள்ளிட்ட நால்வர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

18 Feb, 2017 | 5:15 pm

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்றுள்ள வாகன விபத்துக்களில் பெண் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

வாரியப்பொல பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 35 வயதான தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரின் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொஹூவல – சரணங்கர பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று வீதியை விட்டு விலகி மதிலொன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கொக்கரெல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் லொறியொன்றும் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கொழும்பு காலி வீதியில் ஏதகம பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டியொன்று மோதியதில் யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்