பேஸ்புக் ஊடாக பண மோசடி: நைஜீரிய பிரஜைகள் 9 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது

பேஸ்புக் ஊடாக பண மோசடி: நைஜீரிய பிரஜைகள் 9 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது

பேஸ்புக் ஊடாக பண மோசடி: நைஜீரிய பிரஜைகள் 9 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது

எழுத்தாளர் Bella Dalima

18 Feb, 2017 | 4:40 pm

பேஸ்புக் ஊடாக பலரிடம் தொடர்பினை ஏற்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜைகள் 9 பேரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜைகள் விசா இன்றி நாட்டில் தங்கியிருந்து மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

போலியான பேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்து லண்டனில் வசிப்பதாகத் தெரிவித்து, பலருக்கு இவர்கள் போலியான பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.

இந்த விற்பனை மூலம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் பல இலட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மாலபே பகுதியில் தற்காலிகமாகத் தங்கியிருந்த வேளையலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்