புறக்கோட்டை மாடிக் கட்டடத்தில் பரவிய தீ: 5 மணித்தியாலங்களின் பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது

புறக்கோட்டை மாடிக் கட்டடத்தில் பரவிய தீ: 5 மணித்தியாலங்களின் பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

18 Feb, 2017 | 8:02 pm

கொழும்பு – புறக்கோட்டையிலுள்ள மாடிக் கட்டடமொன்றில் இன்று முற்பகல் தீ பரவியது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்கு சுமார் 5 மணித்தியாலங்கள் சென்றதாக பொலிஸார் கூறினர்.

தோல் உற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமொன்றிலேயே தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்கு 12 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன், இரண்டு அம்பியூலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டன.

கடற்படை மற்றும் கொழும்பு துறைமுக நீர் பௌசர்களும் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டிருந்தன.

சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், தீக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்