தமிழ் பெண்கள் பாலியல் வன்புணர்வு: குற்றச்சாட்டை நிராகரித்தது இராணுவம்

தமிழ் பெண்கள் பாலியல் வன்புணர்வு: குற்றச்சாட்டை நிராகரித்தது இராணுவம்

எழுத்தாளர் Bella Dalima

18 Feb, 2017 | 8:26 pm

இலங்கை இராணுவத்தினர் தமிழ் பெண்களை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக வெளியாகியுள்ள செய்திகளை இராணுவம் நிராகரித்துள்ளது.

இத்தகைய தவறான தகவல்கள் இராணுவத்தினருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாகவும் நல்லிணக்கத்திற்கு பாதிப்பாக அமைவதாகவும் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டிற்கு பின்னர் வடக்கில் இராணுவத்தினர் எந்த ஒரு சிவில் நிர்வாக நடவடிக்கையிலும் கலந்துகொள்ளவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான கருத்துக்களானது அடிப்படையற்ற, பொய்யான குற்றச்சாட்டு என இராணுவத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்