தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் எடப்பாடி கே.பழனிச்சாமி

தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் எடப்பாடி கே.பழனிச்சாமி

தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் எடப்பாடி கே.பழனிச்சாமி

எழுத்தாளர் Bella Dalima

18 Feb, 2017 | 4:16 pm

தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

முதலமைச்சர் பழனிச்சாமி முன்மொழிந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், சபையில் இன்று அமளியில் ஈடுபட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் 88 உறுப்பினர்களும் காவலர்களால் வெளியேற்றப்பட்ட நிலையிலேயே இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் இந்திய முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினரும் வெளிநடப்பு செய்திருந்ததாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்த 122 உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த உறுப்பினர்கள் மாத்திரமே நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்