கடலுக்கடியில் புதிய கண்டம் கண்டுபிடிப்பு

கடலுக்கடியில் புதிய கண்டம் கண்டுபிடிப்பு

கடலுக்கடியில் புதிய கண்டம் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

18 Feb, 2017 | 6:31 pm

உலகில் தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் அண்டார்டிக்கா என 7 கண்டங்கள் உள்ளன.

தற்போது புதிதாக ஒரு கண்டம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது தென் பசுபிக் கடலுக்கு அடியில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, தற்போதுள்ள நியூசிலாந்துக்கு அடியில் கடலுக்குள் மூழ்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கண்டத்திற்கு ‘ஷீலாண்டியா’ (Zealandia) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது அவுஸ்திரேலியாவின் மூன்றில் 2 மடங்கு அளவு கொண்டது.

50 இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது எனவும் நியூசிலாந்தைப் போன்று மூன்று மடங்கு பெரியது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இப்புதிய கண்டம் உருவானது எவ்வாறென ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த தகவல் அமெரிக்க ஆராய்ச்சியியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்