ஊடகவியலாளர் கீத் நோயாவைக் கடத்தித் தாக்கியமை தொடர்பில் இராணுவ உறுப்பினர்கள் மூவர் கைது

ஊடகவியலாளர் கீத் நோயாவைக் கடத்தித் தாக்கியமை தொடர்பில் இராணுவ உறுப்பினர்கள் மூவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

18 Feb, 2017 | 4:30 pm

ஊடகவியலாளர் கீத் நோயாவைக் கடத்திச்சென்று தடுத்து வைத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய்கள் மூவர் குற்றத்தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்மூவருக்கும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் இன்று அதிகாலை சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் இராணுவ மேஜர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

The Nation பத்திரிகையில் பணிபுரிந்த கீத் நோயா 2008 ஆம் ஆண்டு மே மாதம் கடத்திச்செல்லப்பட்டு தாக்கப்பட்டிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்