வீதி மின் விளக்குகளை ஔிரச் செய்வதை கட்டுப்படுத்த நடவடிக்கை

வீதி மின் விளக்குகளை ஔிரச் செய்வதை கட்டுப்படுத்த நடவடிக்கை

வீதி மின் விளக்குகளை ஔிரச் செய்வதை கட்டுப்படுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2017 | 8:05 am

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை கருத்தில் கொண்டு வீதி மின் விளக்குளை ஔிரச் செய்வதை கட்டுப்படுத்தவுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாலை வேளைகளில் ஒரு மணித்தியாலமும் அதிகாலை வேளையில் ஒரு மணித்தியாலமும் வீதி விளக்குகளை அணைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சிமன்ற செயலாளர்களிடம் கேட்டுக்கொண்டதாக மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21ஆம் திகதி அனைத்து உள்ளூராட்சிமன்ற செயலாளர்களையும் கொழும்புக்கு வரவழைத்து இது தொடர்பில் தெளிவுப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் 10 இலட்சம் வீதி மின்விளக்குகள் உள்ளதாகவும் பிரதெச சபை மற்றும் நகரசபை செயலாளர்களின் ஊடாக அநாவசிய வீதி விளக்குகளை ஔிரவிடாது தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதன் மூலம் மின்சாரத்தை சேமிக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்