வறட்சி காரணமாக 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு

வறட்சி காரணமாக 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு

வறட்சி காரணமாக 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2017 | 1:22 pm

வறட்சியால் 12 மாவட்டங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நீரை விநியோகிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

வறட்சியால் விவசாய செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ்.மீனவல குறிப்பிட்டுள்ளார்.

வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நெற் செய்கையை மேற்கொள்ள முடியாமற்போயுள்ள விவசாயிகளை வேறு பணிகளில் அமர்த்தி கொடுப்பனவை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்