மன்னாரில் அனுமதியின்றி கட்டப்படும் சுற்றுலா விடுதி: மக்கள் குற்றச்சாட்டு

மன்னாரில் அனுமதியின்றி கட்டப்படும் சுற்றுலா விடுதி: மக்கள் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

15 Feb, 2017 | 9:03 pm

மன்னார் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தாராபுரம் கடலேரிப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்று தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தாராபுரம் கடலேரிப் பகுதியில் பிரதேச சபையின் அனுமதியின்றி சுற்றுலா விடுதிக்கான கட்டடம் நிர்மாணிக்கப்படுகின்றமை தொடர்பில், மக்களிடமிருந்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த நிர்மாணப் பணிகளைத் தடை செய்யும் வகையில் மன்னார் பிரதேச சபையினால் அறிவித்தலொன்று ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்