புதுமுக இயக்குநர் மீது நடிகை சிருஷ்டி டாங்கே புகார்

புதுமுக இயக்குநர் மீது நடிகை சிருஷ்டி டாங்கே புகார்

புதுமுக இயக்குநர் மீது நடிகை சிருஷ்டி டாங்கே புகார்

எழுத்தாளர் Bella Dalima

15 Feb, 2017 | 5:00 pm

சாந்தனு – சிருஷ்டி டாங்கே இணைந்து நடித்துள்ள படம் ‘முப்பரிமாணம்’.

இந்தப் படத்தை இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அதிரூபன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நடந்தது.

விழாவில் நடிகை சிருஷ்டி டாங்கே பங்கேற்று உரையாற்றியபோது இயக்குநர் மீது பரபரப்பு புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

[quote]முப்பரிமாணம் படத்தின் கதையை இயக்குநர் அதிரூபன் சொன்னபோது பிடித்திருந்தது. அதனால் நடிக்க சம்மதித்தேன். ஆனால், படப்பிடிப்பில் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. இயக்குநர் தினமும் கூடுதல் நேரம் கஷ்டப்படுத்தி நடிக்க வைத்தார். படப்பிடிப்பில் யாருடனும் பேசக்கூடாது, செல்போன் வைத்துக்கொள்ளக்கூடாது என்று தடை விதித்தார். குடும்பத்தினரிடம் கூட பேச முடியவில்லை.

நான் மட்டுமின்றி படத்தின் கதாநாயகன் சாந்தனு உட்பட மற்ற நடிகர், நடிகைகளும் இயக்குநரின் கெடுபிடியால் சிரமப்பட்டனர். சரியாக யாரும் குளிக்கவில்லை. சட்டை கிழிந்து அழுக்குத் துணியோடு தாடி மீசை வளர்த்து பரிதாபமாகத் திரிந்தார்கள். ஒரு கட்டத்தில் இயக்குநர் கொடுத்த கஷ்டங்கள் எல்லை மீற, நான் அழுது விட்டேன். என் தந்தையிடம் இந்த படத்தில் தொடர்ந்து என்னால் நடிக்க முடியாது என்றேன். அவரும் படக்குழுவினரிடம் சொல்லி விட்டு வந்து விடு என்றார்.

நான் அதிரூபனிடம் என்னால் தொடர்ந்து நடிக்க முடியாது படத்தில் இருந்து விலகிவிடுகிறேன் என்றேன். அவர் என்னை சமரசப்படுத்தி படத்தில் உங்கள் கதாபாத்திரம் பேசும்படி இருக்கும் என்று சொல்லி நான் நடித்திருந்த காட்சிகளை என்னிடம் காட்டினார். நிஜமாகவே வித்தியாசமாக இருந்தது. என் சினிமா வாழ்க்கையில் இது திருப்புமுனையாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதால், தொடர்ந்து நடித்து முடித்தேன்.[/quote]

என கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்