நாட்டு மக்களுக்கு சேவையாற்ற கல்விமான்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு

நாட்டு மக்களுக்கு சேவையாற்ற கல்விமான்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Feb, 2017 | 9:09 pm

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவையாற்ற கல்விமான்களும் புத்திஜீவிகளும் முன்வரவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கல்விமான்கள் தமக்கு உரித்தான துறைக்குள் மாத்திரம் மட்டுப்படாது, சமூகத்தின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதன் மூலமே சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கேகாலை வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

கேகாலை வித்தியாலயத்தின் வைரவிழா இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்