சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்றவர்களை தாயகம் திரும்புமாறு பிரதமர் வேண்டுகோள்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்றவர்களை தாயகம் திரும்புமாறு பிரதமர் வேண்டுகோள்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்றவர்களை தாயகம் திரும்புமாறு பிரதமர் வேண்டுகோள்

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2017 | 12:48 pm

அவுஸ்திரேலியாவில், புகலிடக் கோரிக்கையாளர் முகாம்களில் தங்கியுள்ள இலங்கையர்களை தாயகம் திரும்புமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டுப் பிரதமர் மெல்கம் டர்ன்புல்லை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னரே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றதன் மூலம் குறித்த இலங்கையர்கள் சட்டத்தை மீறியுள்ள போதிலும் அவர்கள் நாடு திரும்பும் பட்சத்தில் வழக்கு தாக்கல் செய்வதை தவிர்க்க முடியும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்