சட்டமன்ற உறுப்பினர்களைக் கடத்தியதாக சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு

சட்டமன்ற உறுப்பினர்களைக் கடத்தியதாக சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு

சட்டமன்ற உறுப்பினர்களைக் கடத்தியதாக சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

15 Feb, 2017 | 3:31 pm

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைக் கடத்தியதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சரவணன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தம்மையும் பிற சட்டமன்ற உறுப்பினர்களையும் சசிகலா உள்ளிட்டோர் கடத்திச் சென்றதாக கூவத்தூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சசிகலா தரப்பினரின் கட்டுப்பாட்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூவத்தூர் விடுதியில் இருந்து மாறு வேடத்தில் தப்பி வந்ததாகக் கூறி, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த சட்டமன்ற உறுப்பினர் சரவணன் இன்று இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் கூவத்தூர் சொகுசு விடுதியில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்