ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இந்தியா சாதனை

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இந்தியா சாதனை

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இந்தியா சாதனை

எழுத்தாளர் Bella Dalima

15 Feb, 2017 | 3:59 pm

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி உலக சாதனை படைத்துள்ளது இந்தியா.

Polar Satellite Launch Vehicle C37 (PSLV C37) என பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட்டினை ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீ ஹரிக்கோட்டாவுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவியது இஸ்ரோ.

ஒவ்வொரு கட்டங்களையும் சரியான நேரத்தில் கடந்து செய்ற்கைக்கோள்கள் அதன் சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளன.

இயற்கை வளங்களைப் பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் பிடிக்க உதவும் 3 கெமராக்கள் செயற்கைக் கோள்களில் பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 2 நானோ வகை செயற்கைக்கோள்களும் வெளிநாடுகளைச் சேர்ந்த 101 நானோ வகை செயற்கைக்கோள்களுமே விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மொத்த எடை 664 கிலோ.

பூமி கண்காணிப்பு, தொலையுணர்வுக்காக 2005 ஆம் ஆண்டு கார்ட்டோ சாட் வகையான 5 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ – ISRO) முடிவு செய்தது.

இதன்படி, 2005 ஆம் ஆண்டு மே 5 இல் PSLV C6 ராக்கெட்டில் முதல் கார்ட்டோ சாட் 1 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, PSLV C7, PSLV C9, PSLV C15, PSLV C34 உள்ளிட்ட ராக்கெட்டுகளில் கார்ட்டோ சாட் வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டிருந்தன.

இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு ரஷ்யா ஒரே ராக்கெட்டில் 37 செயற்கைக்கோள்களை ஏவியிருந்தமையே சாதனையாக இருந்தது.

தற்போது, இந்தியா 104 செயற்கைக்கோள்களை ஏவி, ரஷ்யாவின் சாதனையை முறியடித்துள்ளது.

 

1 2

Sriharikota: People watch as as a rocket from  Space agency Indian Space Research Organisation (ISRO) takes off  successfully to launch a record 104 satellites, including India’s earth observation satellite on-board PSLV-C37 from the spaceport of Sriharikota on Wednesday. PTI Photo(PTI2_15_2017_000033B)


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்