அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்து

அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்து

எழுத்தாளர் Bella Dalima

15 Feb, 2017 | 8:10 pm

அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விளையாட்டு, பொருளாதாரம் ஆகிய துறைசார் இரண்டு உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இரு நாட்டு பிரதமர்களும் சந்தித்த பின்னர் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவின் பிரதமர் மல்கம் டர்ன்புல், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினரை இன்று வரவேற்றார்.

இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

விளையாட்டு துறைசார் அபிவிருத்தி உடன்படிக்கையில் அவுஸ்திரேலியாவின் விளையாட்டு மற்றும் சுகாதார அமைச்சர் கிரேக் ஹர்ன் மற்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரெய்ஸ் ஹசெஸன் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எம்.எஸ். சமரதுங்க ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்