அடிப்படை வசதிகளற்ற மற்றுமொரு கிராமத்தை தத்தெடுத்துள்ளார் சச்சின்

அடிப்படை வசதிகளற்ற மற்றுமொரு கிராமத்தை தத்தெடுத்துள்ளார் சச்சின்

அடிப்படை வசதிகளற்ற மற்றுமொரு கிராமத்தை தத்தெடுத்துள்ளார் சச்சின்

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2017 | 11:53 am

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர் டெல்லி மேற்சபை எம்.பி.யாக உள்ளார். எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வசதியில் பின்தங்கிய கிராமத்தை தத்தெடுத்து அடிப்படை வசதிகளை அரசின் உதவியுடன் செய்து கொடுத்து வருகிறார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டம்ராஜூ கான்ட்ரிகா கிராமத்தை தத்தெடுத்து சச்சின் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்தார்.

இந்த நிலையில் டெண்டுல்கர், மராட்டிய மாநிலம் ஒஸ்மான்பாத் மாவட்டத்தில் உள்ள டோன்ஜா என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.
அந்த கிராமத்தில் பாடசாலை, குடிநீர் வசதி, சாலை வசதி, கழிவுநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. இதற்காக டெண்டுல்கர் எம்.பி.உள்ளூர் மேம்பாட்டு நிதியில் இருந்து 4 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்