உடையும் நிலையில் கலிபோர்னியா அணை: 2 இலட்சம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்

உடையும் நிலையில் கலிபோர்னியா அணை: 2 இலட்சம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்

உடையும் நிலையில் கலிபோர்னியா அணை: 2 இலட்சம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்

எழுத்தாளர் Bella Dalima

14 Feb, 2017 | 3:19 pm

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தலைநகர் சாகிராமென்டோவில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓரோவில்லே அணை உடையும் அபாயத்தில் இருப்பதால், அணையை அண்மித்த பகுதிகளில் வாழும் சுமார் 2 இலட்சம் பேர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியாவில் கடந்த வாரம் கனமழை பொழிந்தது. இதனால், 770 அடி கொண்ட ஓரோவில்லே அணை முழுவதுமாக நிரம்பி வழிகிறது.

விநாடிக்கு 1 இலட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில், கனமழையால் அணையிலிருந்து தண்ணீர் வெளியேறும் வடிகாலில் மண் அரிப்பு காரணமாக மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், அவசர வடிகால் பகுதியிலும் புதிதாக அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அணை வலுவிழந்து உடையும் அபாயத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. வடிகால் பகுதியில் உடைப்பு ஏற்பட்டாலும் அணைக்கு பாதிப்பில்லை என அரச அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அங்கு 50 ஆண்டுகால வரலாற்றில் இதுபோல மக்கள் வெளியேற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான ஓரோவில்லே உடையும் பட்சத்தில், சுற்றுப்புற நகரங்களில் வெள்ளம் புகுந்து மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்