வவுனியாவில் பல பகுதிகளுக்கு விஜயம் செய்த மக்கள் சக்தி குழுவினர்

வவுனியாவில் பல பகுதிகளுக்கு விஜயம் செய்த மக்கள் சக்தி குழுவினர்

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2017 | 5:51 pm

மக்களின் பிரச்சினைகளை ஆராயும், மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டம், வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயும் நியூஸ் பொஸ்ட் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர் இன்றைய தினம் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தனர்.

பாலமோட்டை, மாணிக்க இலுப்பைக்குளம், சிதம்பரம், கள்ளிக்குளம் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்த எங்களுடைய குழுவினரிடம் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை தெரிவித்திருந்தானர்.

தமக்கு வீடுகள் இன்மையால் எதிர்நோக்கும் பிரச்சினைகள், குடிநீர் பிரச்சினை, போக்குவரத்து பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளை மக்கள் சக்தி குழுவினர் பதிவுசெய்தனர்.

வவுனியா கோவில்குஞ்சிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 9 வரையில் வகுப்புகள் இருந்தும் மூன்று ஆசிரியர்களே பணியாற்றுகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்