மஹிந்த ராஜபக்ஸவின் காலத்திலேயே 110 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது – ரவி கருணாநாயக்க

மஹிந்த ராஜபக்ஸவின் காலத்திலேயே 110 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது – ரவி கருணாநாயக்க

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2017 | 6:51 pm

கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் இன்று  (13) நடைபெற்றது.

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புட்ட நபர்கள் கைது செய்யப்படாமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் இதன்போது பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் இதன்போது11 நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகளினால் ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்ய தொடர்ந்தும் மக்கள் மீது வரி சுமத்தப்படும் விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் நிதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.

நிதி அமைச்சரின் ரவி கருணாநாயக்கவின் பதில்…

[quote]110 மில்லியன் ரூபா நட்டம், மஹிந்த ராஜபக்ஸவின் காலத்திலேயே ஏற்பட்டது. நாம், மக்கள் மீது சுமையை சுமத்தாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம். அன்று நட்டத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களே இன்று சத்தமிடுகின்றனர். அதனையே இன்று பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் காண முடிகின்றது. இது நேற்று அல்லது நேற்று முன்தினம் இடம்பெற்ற விடயங்கள் அல்ல. மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற விடயங்களே.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்