மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2017 | 8:39 pm

ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை இந்திய உச்சநீதிமன்றம் நாளை (14) அறிவிக்கவுள்ளது.

இதேவேளை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாக பிளவுபட்டதன் பின்னர் இன்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதன்முறையாக தலைமைச் செயலகத்துக்கு சென்றிருந்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மற்றும் சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு மேன்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை (14) காலை அறிவிக்கவுள்ளது.

நீதிபதிகள், பினாக்கி சந்திர கோஷ் மற்றும் அமிதவ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கவுள்ளதாக பிபிசி தமிழ் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 1991- 96ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், 66.65 கோடி ரூபாய்க்கு வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தலைமைச் செயலகத்திற்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது ஆதரவு அமைச்சரான பாண்டியராஜனும் சென்றிருந்தார்.

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்துரை செயலாளர் அபூர்வ வர்மா மற்றும் நிதித்துறை செயலாளர் சண்முகம் ஆகியோருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இறுதியாக கடந்த 5 ஆம் திகதி பன்னீர்செல்வம் தலைமைச் செயலகம் சென்றிருந்ததோடு அதே தினத்தில் அ.தி.மு.கவின் சட்டமன்ற கட்சித் தலைவராக சசிகலா தேர்வுசெய்யப்பட்டதால் முதலமைச்சர் பதவியை பன்னீர்செல்வம் இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜெயலலிதா இறந்த போதே, நான் நினைத்திருந்தால் முதல்வர் ஆகியிருக்கலாம் என சசிகலா தெரிவித்துள்ளார்.

மேலும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதிக்கு இன்றும் சென்றிருந்தார்.

தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் தெரிவாக வேண்டுமென்பது தொடர்பில் மக்கள் கருத்தறியும் நடவடிக்கை சில இடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்