பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் உள்ளிட்ட 2 நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு மத்திய வங்கி நிதிச் சபை கட்டுப்பாடு

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் உள்ளிட்ட 2 நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு மத்திய வங்கி நிதிச் சபை கட்டுப்பாடு

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2017 | 7:55 pm

மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புப்பட்ட இரண்டு நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு மத்திய வங்கியின் நிதிச் சபை கட்டுப்பாடு விதித்துள்ளதாக இன்று தெரியவந்தது.

அந்தக் கட்டுப்பாடுகளை ஆட்சேபனைக்கு உட்படுத்தி குறித்த நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவொன்று இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

சர்ச்சைக்குரிய முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தமது நிறுவனங்களின் கொடுக்கல் வாங்கல்களை மட்டுப்படுத்தும் வகையில் மத்திய வங்கியின் நிதிச் சபையினால் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 07 ஆம் திகதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்தி ரீட் கட்டளை பிறப்பிக்குமாறு இந்த மனுவின் மூலம் கோரியிருந்தனர்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட 13 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புப்பட்ட பேர்ப்பச்சுவல் எஸட் மனேஜ்மன்ட் தனியார் நிறுவனம் மற்றும் பேர்ப்பச்சுவல் கெபிட்டல் ஹோல்டிங் ஆகிய நிறுவனங்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளன.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்