பிரபு கொலை முயற்சிக்கு சதித்திட்டம் தீட்டிய சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

பிரபு கொலை முயற்சிக்கு சதித்திட்டம் தீட்டிய சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

பிரபு கொலை முயற்சிக்கு சதித்திட்டம் தீட்டிய சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2017 | 5:58 pm

பிரபு கொலை முயற்சிக்கு சதித்திட்டம் தீட்டியதாக கைதுசெய்யப்பட்ட 5 சந்தேகநபர்களுக்கும் எதிரான குற்றப்பத்திரிகையை ஒன்றாக தாக்கல் செய்வதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் பொலிஸாருக்கு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

பிரபு ஒருவரை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக கடந்த மாத இறுதியில் புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்டிருந்த ஐந்து பேர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் சிலவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்த சந்தேகநபர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களை அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைத்தமைக்கான பற்றுச்சீட்டை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

அத்துடன் சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ஒன்றாக தாக்கல் செய்வதற்கும், தொடர்ந்து சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதுதவிர இரண்டாவது சந்தேகநபரை சம்பவ தேவையின் அடிப்படையில் விளக்கமறியலுக்கு வெளியில் அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொள்வதற்கும் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளது.

கிளிநொச்சி, பளை மற்றும் மன்னார் பகுதிகளை சேர்ந்தவர்களே பிரபு கொலை முயற்சிக்கான சதியில் ஈடுபட்டதாக பீ அறிக்கை மூலம் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.

சந்தேகநபர்கள் ஐவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்