பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியா விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியா விஜயம்

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2017 | 1:13 pm

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இலங்கை – அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான இராஜதந்திர தொடர்புகள் ஏற்பட்டு 70 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதை முன்னிட்டு பிரதமரின் அவுஸ்திரேலியாவுக்கான விஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடையே சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பையடுத்து, அவுஸ்திரேலியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கைகள் சிலவும் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்