பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எதிர்ப்பு நடவடிக்கையில்

பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எதிர்ப்பு நடவடிக்கையில்

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2017 | 1:25 pm

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, மாத்தறையில் இன்று காலை எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டார்.

அவர் மாத்தறை, ராகுல வீதியிலுள்ள தமது வீட்டிலிருந்து, கால்நடையாகவே மாத்தறை சுஜாதா மகளிர் வித்தியாலயத்தை சென்றடைந்ததுடன், அங்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

சுஜாதா மகளிர் வித்தியாலயத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பதில், இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்