பாடசாலை மாணவர்களுக்கான புதிய ஆயுள் காப்புறுதித்திட்டம் விரைவில் அமுல்

பாடசாலை மாணவர்களுக்கான புதிய ஆயுள் காப்புறுதித்திட்டம் விரைவில் அமுல்

பாடசாலை மாணவர்களுக்கான புதிய ஆயுள் காப்புறுதித்திட்டம் விரைவில் அமுல்

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2017 | 2:10 pm

பாடசாலை மாணவர்களுக்கான புதிய ஆயுள் காப்புறுதித்திட்டம் விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இரண்டு குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவற்றுள் ஒரு குழு அமைச்சின் செயலாளர் தலைமையிலும் மற்றைய குழு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தலைமையிலும் நியமிக்கப்பட உள்ளன.

கல்வியமைச்சின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்படும் குழுவில் இரண்டு வைத்தியர்கள், சட்டத்தரணி அடங்கலாக 5 அதிகாரிகள் இடம்பெறவுள்ளதுடன், வலயக் கல்விப் பணிப்பாளர் தலைமையிலான குழுவில் மாகாண சுகாதார அதிகாரி உள்ளிட்டோர் இடம்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் மாணவர்களுக்கான புதிய ஆயுள் காப்புறுதித்திட்டதிற்காக 2.7 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், 43 இலட்சம் பாடசாலை மாணவர்கள் இந்த காப்புறுதித் திட்டத்திற்குள் உள்வாங்கப்படுவார்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாணவர் ஒருவர் 2 இலட்சம் ரூபா காப்புறுதிக்கு உரித்துடையவராவதுடன், அரச மற்றும் தனியார்துறை வெளிநோயாளர் பிரிவுகளில் இதன்மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக வருடம் ஒன்றுக்கு 10,000 ரூபா வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்றாத நோய்க்காக ஆகக்கூடிய தொகை இரண்டு இலட்சம் ரூபா செலுத்தப்படும் என்பதுடன், இதற்கான அறிவித்தல், எதிர்வரும் வாரங்களில் ஊடகங்களில் வெளியிடப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்