தொடரும் நில மீட்புப் போராட்டம்: வலுசேர்க்கும் ஆதரவுகள்

தொடரும் நில மீட்புப் போராட்டம்: வலுசேர்க்கும் ஆதரவுகள்

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2017 | 7:37 pm

நில விடுவிப்பு எப்போது நிஜயமாகும் என்ற நீதிக்காக தவமிருக்கின்றனர் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்கள்.

கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு பகுதி மக்கள் 14 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பிலக்குடியிருப்பு விமானப்படைத்தளத்தினை அகற்றி தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி இவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்கள் ,அரசியல் பிரமுகர்கள் என பலரும் தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, இராணுவ முகாமை அகற்றக்கோரி பதினொரு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த புதுக்குடியிருப்பு மக்கள் இன்று முதல் சுழற்சிமுறையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

மேலும் பிலக்குடியிருப்பு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்