இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2017 | 4:54 pm

வட மாகாண கல்வி அமைச்சின் செயற்பாடுகளை கண்டித்து, இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் யாழ்ப்பாணத்தில் இன்று (13) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள வட மாகாண கல்வியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஆசிரியர்களின் இடமாற்ற இழுபறி நிலையை கண்டித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் கடந்த மாதம் 10 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், கல்வியமைச்சின் செயலாளரை தாக்க முற்பட்டதாக தெரிவித்து மூன்று ஆசிரியர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

அந்த ஆசிரியர்களின் மீள் இணைப்பு தொடர்பில் கல்வியமைச்சு இதுரையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இவர்கள் குற்றஞ்சாட்டினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்