வவுனியாவைச் சேர்ந்த சிலர் கேப்பாப்பிலவு மக்களுடன் இணைந்து போராட்டம்

வவுனியாவைச் சேர்ந்த சிலர் கேப்பாப்பிலவு மக்களுடன் இணைந்து போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2017 | 4:14 pm

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களின் நில மீட்புப் போராட்டத்துடன் வவுனியாவிலிருந்து சென்ற சிலரும் இணைந்து கொண்டுள்ளனர்.

பிலக்குடியிருப்பு விமானப்படை முகாமை அகற்றி, தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பிலக்குடியிருப்பு மக்கள் தொடர்ந்து 10 ஆவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விமானப்படைத் தளத்திற்கு முன்பாக உள்ள வீதியிலிறங்கி மக்கள் நேற்று முதல் மறியல் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

சொந்த நிலத்தில் குடியேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்பதே இவர்களது நிலைப்பாடாக அமைந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்