வட மாகாண தனியார் போக்குவரத்துத்துறையினர் பணிப்பகிஷ்கரிப்பு: பயணிகள் அசௌகரியம்

வட மாகாண தனியார் போக்குவரத்துத்துறையினர் பணிப்பகிஷ்கரிப்பு: பயணிகள் அசௌகரியம்

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2017 | 7:40 pm

வட மாகாண தனியார் போக்குவரத்து துறையினர் மாகாணம் தழுவிய பணிப்பகிஷ்கரிப்பில் இன்று ஈடுபட்டனர்.

இலங்கை போக்குவரத்து சபையினரின் நடவடிக்கைகளைக் கண்டித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

வட மாகாணம் முழுவதிலும் இணைந்த போக்குவரத்து அட்டவணையை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பான சேவையை வழங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என தனியார் போக்குவரத்துத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாமையால் வட மாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்