யாழ்தேவியுடன் கெப் வாகனம் மோதியது: இராணுவ வீரர் உயிரிழப்பு

யாழ்தேவியுடன் கெப் வாகனம் மோதியது: இராணுவ வீரர் உயிரிழப்பு

யாழ்தேவியுடன் கெப் வாகனம் மோதியது: இராணுவ வீரர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2017 | 5:00 pm

யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதிகளுக்கு இடையில், யாழ்தேவி ரயிலுடன் கெப் வாகனமொன்று மோதியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று முற்பகல் விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெப் வாகனத்தை செலுத்திய, லான்ஸ் கோப்ரல் நிலையிலுள்ள இராணுவ வீரரே உயிரிழந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன தெரிவித்தார்.

இந்த விபத்து காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவி ரயில் போக்குவரத்திற்கு சில மணித்தியால தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்