மாலபே தனியார் மருத்துவக்கல்லூரி தொடர்பான பிரச்சினையை நியாயமான முறையில் தீர்ப்போம்: ஜனாதிபதி

மாலபே தனியார் மருத்துவக்கல்லூரி தொடர்பான பிரச்சினையை நியாயமான முறையில் தீர்ப்போம்: ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2017 | 8:49 pm

எவருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில், மாலபே தனியார் மருத்துவக்கல்லூரி தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வாக்குறுதியளித்தார்.

நுவரெலியாவில் “பசுமை பூமி” திட்டத்தின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை வழங்கி வைத்த நிகழ்விலேயே ஜனாதிபதி இந்த வாக்குறுதியை வழங்கினார்.

ஜனாதிபதி தெரிவித்ததாவது,

[quote]இந்த நாட்டில் இருந்து 75,000, 80,000 பேர் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு செல்கின்றனர். அதனால் அவர்களை எமது நாட்டிற்குள் வைத்துக்கொண்டு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் உயர் தரத்தில் காணப்பட வேண்டும். மாலபே சைட்டம் தொடர்பான பிரச்சினையை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் நியாயமாகத் தீர்ப்போம். எதிர்காலத்தில் பல்கலைக்கழக மருத்துவ பீடங்களின் மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள், மாலேபே மருத்துவக் கல்லூரியின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருடனும் கலந்துரையாடவுள்ளேன். இவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான திட்டமொன்றை முன்வைத்து, அரசாங்கம் என்ற ரீதியில் இந்த பிரச்சினையை தீர்ப்போம் என நான் தெளிவாக இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்கின்றேன்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்