பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு “பசுமை பூமி” திட்டத்தின் கீழ் 71 வீடுகள் கையளிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு “பசுமை பூமி” திட்டத்தின் கீழ் 71 வீடுகள் கையளிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு “பசுமை பூமி” திட்டத்தின் கீழ் 71 வீடுகள் கையளிப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2017 | 8:44 pm

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான “பசுமை பூமி” தனி வீட்டுத் திட்டத்தின் கீழ், அக்கரப்பத்தனை – ஊட்டுவில் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 71 வீடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார்.

பெருந்தோட்டங்களில் காணப்படும் லயன் வீடுகளுக்கு மாற்றாக இந்த புதிய பெருந்தோட்ட கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் 7 பேர்ச்சஸ் காணியில் 550 சதுர அடியில் இரண்டு அறைகள், சமையலறை, வரவேற்பறையுடனான தனி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த வீடுகளுக்கான மின்னிணைப்பு மற்றும் குடிநீர் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், வீட்டு உரிமையாளர்களுக்கு “பசுமை பூமி” திட்டத்தின் கீழ் காணி உறுதிப்பத்திரங்களும் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்