நாமல் உள்ளிட்ட ஐவருக்கு 2 மாதங்களுக்கு ஒரு தடவை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவு

நாமல் உள்ளிட்ட ஐவருக்கு 2 மாதங்களுக்கு ஒரு தடவை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவு

நாமல் உள்ளிட்ட ஐவருக்கு 2 மாதங்களுக்கு ஒரு தடவை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2017 | 4:48 pm

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவரை இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை இறுதி ஞாயிறு தினத்தில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராக வேண்டுமென கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி, 45 மில்லியன் ரூபாவை ஈட்டியமை தொடர்பில் நிதித்தூய்தாக்கல் தடைச்சட்டத்தின் கீழ், நாமல் ராஜபக்ஸ மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனத்தின் பணிப்பாளர்கள் நால்வருக்கு எதிராக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதிமன்றத்தைப் புறக்கணித்து வெளிநாடு சென்றுள்ளதாகக் கூறப்படும் இந்திக்க பிரபாத் கருணாஜீவ என்ற சட்டத்தரணி மற்றும் இரேஷா சில்வா ஆகியோரைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் மூலம் பகிரங்க அறிவித்தல் விடுப்பதற்கும் மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொக்ஸி உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைக் கோவைகளை சட்ட மா அதிபருக்கு அனுப்பி ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் இன்று
அறிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஜூன் மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்