சைட்டம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி மீது துப்பாக்கிப் பிரயோகம்: வாக்குமூலங்கள் பதிவு

சைட்டம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி மீது துப்பாக்கிப் பிரயோகம்: வாக்குமூலங்கள் பதிவு

சைட்டம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி மீது துப்பாக்கிப் பிரயோகம்: வாக்குமூலங்கள் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2017 | 4:31 pm

மாலபே சைட்டம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரத்ன பயணித்த கார்மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிலரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற பின்னர், டொக்டர் சமீர சேனாரத்னவை ஏற்றிச்சென்ற அம்பியூலன்ஸ் வாகன சாரதியிடமும் வாக்குமூலம் பதிவு செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதுதவிர, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட இடத்திற்குச் சென்றிருந்த வைத்தியர் ஒருவரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் டொக்டர் சமீர சேனாரத்ன அணிந்திருந்த ஆடைகளை அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சைட்டம் நிறுவன பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில், நேற்று முன்தினம் (07) இரவு 8 மணியளவில் மாலபே சைட்டம் நிறுவன பிரதம நிறைவேற்றதிகாரி டொக்டர் சமீர சேனாரத்னவை இலக்குவைத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்