சுமார் 3000 தாதியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு

சுமார் 3000 தாதியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு

சுமார் 3000 தாதியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2017 | 3:39 pm

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 3000 தாதியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சில வைத்தியசாலைகள், ஆதார வைத்தியசாலைகளாக தரமுயர்த்தப்பட்டதன் காரணமாக, தாதியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜயசுந்தர பண்டார குறிப்பிட்டார்.

எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

அடுத்த வருடத்திற்குள் சுமார் 1000 தாதியர்கள் பயிற்சிகளை நிறைவு செய்யவுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

இதுதவிர, 2018 ஆம் ஆண்டிலும் 1000 தாதியர்கள் பயிற்சிகளை நிறைவு செய்யவுள்ளதுடன், அவர்களையும் வைத்தியசாலைகளில் சேவைக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்