காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம்: சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம்: சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம்: சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2017 | 4:04 pm

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் அலுவலகம் குறித்தான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சட்டத்தில் உள்ள காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபித்தல், நிர்வகித்தல் மற்றும் அதன் பணிகளை நிறைவேற்றுதல் எனும் விடயங்களில் திருத்தம் மேற்கொள்வதற்காக பிரதமரினால் அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இந்த சட்டமானது, 2016 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

காணாமற்போனோர் தொடர்பான அலுவலக அதிகாரங்களின் படி, எவரேனும் நபரொருவர் அல்லது அமைப்புடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பிலான சட்டத்தின் 11 ஆம் பிரிவின் கீழுள்ள உறுப்புரையை அகற்றுவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்பொருட்டு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட வரைபொன்றை மேற்கொள்வதற்காக, சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு தேவையான ஆலோசனைகளை பிரதமர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார்.

இதேவேளை, சட்டமும் ஒழுங்கும் பற்றிய சார்க் நாடுகளது செயலாளர்களின் 8 ஆவது கூட்டம் மற்றும் சார்க் குடியமர்வு அதிகாரிகளின் கூட்டத்தை இலங்கையில் நடத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க இதற்கான யோசனைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்