காணாமற்போனோரின் உறவினர்கள் சிலர் பிரதமரை சந்தித்தனர்

காணாமற்போனோரின் உறவினர்கள் சிலர் பிரதமரை சந்தித்தனர்

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2017 | 10:04 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் காணாமற்போனோரின் உறவினர்கள் சிலருக்கும் இடையில் அலரி மாளிகையில் இன்று காலை சந்திப்பொன்று இடம்பெற்றது.

காணாமற்போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி வவுனியாவில் கடந்த மாதம் 23 ஆம் திகதி, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நான்கு நாட்களின் பின்னர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவுடன் கடந்த மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

ருவன் விஜேவர்தன அங்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய, இன்று இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான ஊடக சந்திப்பொன்றை, காணாமற்போனோரின் உறவினர்கள் இன்று மாலை ஏற்பாடு செய்திருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்