இனி சீனாவிற்குள் நுழைய விமான நிலையத்தில் கைரேகை பதிவு செய்ய வேண்டும்! 

இனி சீனாவிற்குள் நுழைய விமான நிலையத்தில் கைரேகை பதிவு செய்ய வேண்டும்! 

இனி சீனாவிற்குள் நுழைய விமான நிலையத்தில் கைரேகை பதிவு செய்ய வேண்டும்! 

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2017 | 6:52 pm

சீனா செல்ல விரும்பும் வெளிநாட்டினர் அந்நாட்டிற்குள் நுழையும் முன், விமான நிலையத்தில் தங்கள் கைரேகைகளைப் பதிவு செய்ய வேண்டுமென சீனாவின் பொது பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

இந்த வருடம் முழுவதும், சீனா முழுவதும் உள்ளே நுழைபவர்கள் மற்றும் வெளியே செல்பவர்கள் குறித்த விபரங்களைப் பதிவு செய்யும் துறைகளில் இனி கைரேகைப் பதிவுகளும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூதரக ரீதியிலான கடவுச்சீட்டுக்களைப் பெற்றுள்ளவர்கள் மற்றும் பரஸ்பர ஒப்பந்தங்கள் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த நடைமுறையில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையானது நாளை (10) முதல் ஷென்ஸென் விமான நிலையத்தில் அமுலுக்கு வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்