அரச நிறுவனங்களில் 11,000 கோடி ரூபா நட்டம்: விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

அரச நிறுவனங்களில் 11,000 கோடி ரூபா நட்டம்: விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

அரச நிறுவனங்களில் 11,000 கோடி ரூபா நட்டம்: விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2017 | 3:59 pm

15 மாதங்களுக்குள் 15 அரச நிறுவனங்களில் 11,000 கோடி ரூபாவிற்கும் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

2015 மே மாதத்தில் இருந்து 2016 ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில், 15 அரச நிறுவனங்களின் இலாப நட்டம் தொடர்பான கோப் குழுவின் விசாரணை அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சதொச, மகநெகும, ஶ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் தேசிய லொத்தர் சபை போன்ற நிறுவனங்களும் நட்டமடைந்துள்ள நிறுவனங்களில் அடங்கும்.

சூரியபுர போன்ற விளையாட்டு மைதானங்களுக்கு உரிமையாளர்கள் இல்லாத நிலைமையே இன்று காணப்படுவதாகவும் துறைமுக அதிகார சபையினாலா அல்லது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினாலா 53 பில்லியன் ரூபா செலுப்படுகின்றது என வினா
எழுவதாகவும் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டார்.

இதனால், 530 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், வீதி அதிபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தற்ற திட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட சில விடயங்களுக்காக 57 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு மில்லியன் கணக்கான டொலர்களும் மில்லியன் கணக்கான யூரோக்களும் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட சுனில் ஹந்துன்னெத்தி, அந்தப் பணம் செலவிடப்பட்ட விதம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாகவும்
குறிப்பிட்டார்.

அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினால் ஏற்பட்டுள்ள நட்டம் குறித்தும் இந்த கோப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சுனில் ஹந்துன்னெத்தி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்